ரஜினி கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி?

நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும் டிசம்பர் 31 ஆம் தேதி அதுகுறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 

மேலும் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்துள்ளார். 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் சேவை கட்சியின் தலைவரின் முகவரி சென்னை எர்ணாவூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரஜினி தனது கட்சி தொடக்கம் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தாலும் கட்சியின் பெயர், அறிவிப்பு வரும்வரை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கட்சி ரஜினியின் கட்சிதான் என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை ரஜினி விரைவில் வெளியிடுவார் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com