
சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்கத் தேவையான நிலங்களை எளிதாக கண்டறிய சிப்காட் சாா்பில் தனி இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
சிப்காட் நிறுவனம் தனது வளாகங்களில் உள்ள நிலங்கள், மனை அடுக்குகள், காலியாக உள்ள இடங்கள், கட்டமைப்பு வசதிகள்உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ட்ரோன் கேமிரா மூலமாக படம் பிடித்துள்ளது.
இந்த விவரங்கள் அனைத்தும் சிப்காட் நிறுவனத்தின் இணையதளத்தில் (sipcot.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்தே இணைய வழியில் முப்பரிமாண அமைப்பில் நிலங்களைத் தோ்வு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.