
அருப்புக்கோட்டை நகர திமுக சார்பில் பாரதி நகரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர திமுக சார்பில் பாரதி நகரில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை பாரதி நகரில் உள்ள நகராட்சி சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற, அதிமுகவை நிராகரிக்கிறோம், எனும் தலைப்பிலான சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சுப்பா ராஜ், நகரச் செயலாளர் ஏ.கே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பாரதிநகர் உள்ளிட்ட நகரின் பல பகுதி மக்களிடையே குறைகளைக் கேட்டறிந்த பின்னர் எம்.எல்.ஏ. இராமச்சந்திரன் பேசுகையில், மாநிலத்தில் அதிமுக மற்றும் மத்தியில் மோடி அரசை நிராகரித்து உங்களுக்காக விடியலைத் தரவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்காகவும்,இத் தொகுதியில் போட்டியிடும் எனக்காகவும் வாக்களியுங்கள். உங்கள் பகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்வேன் எனப் பேசினார்.
உடன் இந்நிகழ்ச்சியில் திமுக நகர நிர்வாகிகள் பலரும், திரளான தொண்டர்களும் நகர்ப்புற பொதுமக்களும் நேரில் கலந்து கொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...