
ஈரோட்டில் திமுக சார்பில் பெரியாருக்கு அஞ்சலி
ஈரோடு: ஈரோட்டின் திமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு. முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் மாநில உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் எம் கந்தசாமி, கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி .சி. சந்திரகுமார், முன்னாள் யூனியன் சேர்மன் எல்லப்பாளையம் சிவகுமார் மாவட்ட நிர்வாகிகள் ஆ. செந்தில்குமார், பி.கே.பழனி சாமி. மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மாதையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...