திருக்கொடியலூர் மங்கள சனீஸ்வரர் கோயில் சனிப்பெயர்ச்சி விழா: இணையவழி தரிசிக்க ஏற்பாடு

திருக்கொடியலூர் மங்கள சனீஸ்வரர் கோயிலில், நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
திருக்கொடியலூர் ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவான்
திருக்கொடியலூர் ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவான்

திருக்கொடியலூர் மங்கள சனீஸ்வரர் கோயிலில், நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதனைப் பக்தர்கள் இணையதளம் மூலமும் காண வசதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருமீயச்சூரில் புகழ் பெற்ற ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான ஸ்ரீலலிதாம்பிகை கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு அருகிலுள்ள திருக்கொடியலூர், சனீஸ்வர பகவான் அவதரித்த ஸ்தலமாகும்.

இக்கோயிலில் உள்ள மங்கள சனீஸ்வர பகவானுக்கு, நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சியையொட்டி, சனிப் பரிகார ஹோமமும், பால் அபிஷேகமும் நடைபெற உள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும். 

மேலும் நேரடியாக கலந்து கொள்ளமுடியாத பக்தர்களுக்காக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல், சனிப்பெயர்ச்சி விழாவினை https://www.youtube.com/c/templelivestream என்ற இணையதளம் மூலம் யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளதாக, கோயிலின் தக்கார் ப.மாதவன், செயல் அலுவலர் பா.தன்ராஜ், மேலாளர் க.வள்ளி கந்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com