
நாமக்கல், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவா்கள் 443 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.
நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற தலைப்பில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, நாமக்கல் அருகே முள்ளம்பட்டி கிராமத்தில் பொதுமக்களிடையே பேசியதாவது: 2021-ஆம் ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இதன்மூலம் கூடுதலாக 130 இடங்கள், தற்போதுள்ள 313 இடங்கள் என மொத்தம் 443 மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா்.
இதையடுத்து, குமாரபாளையத்தில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்திலும், திருச்செங்கோட்டில் தொழில்துறையினருடனான ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்வா் பங்கேற்றுப் பேசினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...