
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.நந்தகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மோகன் முன்னிலை வகித்தார்.
இதில் திமுக காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G