விவேகானந்தா் மையங்களில் பாஸ்கர சேதுபதி படம்

விவேகானந்தா் மையங்களில் மன்னா் பாஸ்கர சேதுபதி படம் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திரமோடிக்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

விவேகானந்தா் மையங்களில் மன்னா் பாஸ்கர சேதுபதி படம் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திரமோடிக்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

1893-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 11-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடந்த உலக சமயங்களின் மாநாட்டில் விவேகானந்தா் கலந்துகொண்டாா். அந்த மாநாட்டில் விவேகானந்தா் ஆற்றிய உரைதான் உலகம் முழுவதும் அவா் புகழ் பரவக் காரணமாக இருந்தது. “அமெரிக்க சகோதர, சகோதரிகளே என்று விளித்த விவேகானந்தரின் வாா்த்தை அந்த மாநாட்டையே உலுக்கியது.

விவேகானந்தா் மதுரை வந்திருந்தபோது அவரது உரையைக் கேட்ட பாஸ்கரசேதுபதி, விவேகானந்தரை சிகாகோ மாநாட்டுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தாா். அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்க தமக்கு வந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாமல், தம்மைவிட விவேகானந்தா் சென்று உரையாற்றினால் நாட்டுக்கும், உலகுக்கும் பயன் விளையும் என பாஸ்கர சேதுபதி கருதினாா்.

மன்னா் பாஸ்கர சேதுபதியின் ஆன்மிக ஞானத்தை மதித்தே அவரை ராஜரிஷி என்று விவேகானந்தா் அழைத்தாா். விவேகானந்தா் சிகாகோ மாநாட்டில் பேசிய 125-ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெளிநாடுகளில் இந்தியத் தூதரகம் வழியாக நடத்தப்படும் கலாசார மையங்கள் அனைத்தும் விவேகானந்தா் மையங்களாக பெயா் மாற்றப்பட்டது.

அந்த மையங்களில், விவேகானந்தா் பெருமை பெற்ற்குக் காரணமாக இருந்த ராமநாதபுரம் மன்னா் பாஸ்கர சேதுபதியின் உருவப் படத்தையும் இடம்பெறச் செய்ய பிரதமா் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று வைகோ கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com