
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் குண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் விடுத்த மிரட்டல் காரணமாக புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் குண்டு வைத்துள்ளதாக, மர்மநபர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்து தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் புதன்கிழமை காலை 10 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததால், இதுதொடர்பாக விழுப்புரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...