

தைப்பூசத்தையொட்டி துறையூர் மூங்கில் தெப்பக்குளம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
துறையூர் மூங்கில் தெப்பக்குளம் அருகே உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு தைப்பூசத்தை ஒட்டி சனிக்கிழமை பால், தயிர், சந்தனம், விபூதி பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டும், பழவகைகள் கொண்டும் அபிஷேகம் செய்யப்பட்டு புது வஸ்திரம் சாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் அபிஷேக ஆராதனைகளை நேரில் கண்டு வழிபாடு செய்தனர்.
இதேபோல் கரட்டுமலை முருகன் கோயில், முசிறி பிரிவு சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில், திருச்சி சாலையில் உள்ள கோலோச்சு முருகன் கோயில் உள்ளிட்ட துறையூர் பகுதியில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்புப் பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.