
கன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சிக்கு எதிரி காங்கிரஸ்காரர்கள் தான் என்று கே.எஸ். அழகிரி பேசியது நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகேயுள்ள வரலாற்றுக் கூடத்தில் தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் 2 நாள் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமரிசனம் செய்யும் சீமான், வைகோ போன்றவர்களுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்னைகளிலோ அல்லது கலவரங்களிலோ ஈடுபடுவதில்லை. ஆனால், உள்கட்சி கூட்டங்கள் என்று வரும்போது மண்டை உடைந்து ரத்தம் வரும் அளவுக்கு மோதிக்கொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களால்தான் காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் உள்ளது என்றார்.
அவரது இந்த பேச்சு அங்கிருந்த நிர்வாகிகள் மத்தியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது.