
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 4ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நகர்மன்ற வளாகத்தில் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது.
நான்காம் நாளான திங்கள்கிழமை முற்பகல் 11 மணியளவில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவுக்கு வருகை தந்தனர்.
புத்தகத் திருவிழா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் மாணவர்களுடன் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் முதுநிலை விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன் உரையாடினார்.
சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்ற அறிவியல் நிகழ்வுகளை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அவர் விளக்கினார்.
தொடர்ந்து மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் வெங்கடேஸ்வரன் பதிலளித்தார்.