
முதல்வர் பழனிசாமி
சென்னை: நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதன்கிழமையன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் இதர அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
சமீபத்தில் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக உருவாக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன