
குடியாத்தம் ஒன்றியத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூத்தம்பாக்கம் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
ஆம்பூரை அடுத்த கூத்தம்பாக்கம் ஊராட்சியை மாதனூர் ஒன்றியத்திலிருந்து குடியாத்தம் ஒன்றியத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என காவல்துறையினர் பந்தலை பிரித்து கிராம மக்களை விரட்டினாலும், வெயிலிலும் உட்காருவோம் என கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.