
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள் கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி, சென்னையில் திங்கள் கிழமையான இன்று(பிப்.17) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.3,911க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.104 குறைந்து, ரூ.31,288க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.39 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.390 அதிகரித்து ரூ.50.400-க்கும் விற்கப்படுகிறது.
திங்கள் கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் .......................3,911
1 சவரன் தங்கம் ..................... 31,288
1 கிராம் வெள்ளி .................. 50.40
1 கிலோ வெள்ளி .................50,400
சனிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 3,924
1 பவுன் தங்கம் ..................... 31,392
1 கிராம் வெள்ளி .................. 50.01
1 கிலோ வெள்ளி ................. 50,010