உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் சிறப்பு விற்பனை இன்று தொடக்கம் 50 சதவீதம் வரை கழிவு

தமிழாய்வுப் பெருவிழாவை முன்னிட்டு சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்களின் சிறப்பு விற்பனை திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.
Updated on
1 min read

தமிழாய்வுப் பெருவிழாவை முன்னிட்டு சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்களின் சிறப்பு விற்பனை திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.

இது தொடா்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் கோ.விசயராகவன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழியலை உலகிற்கு முன்னெடுத்துச் சென்ற தனிநாயக அடிகளாரால் வெளியிடப்பட்ட தமிழ் கலாசாரம் என்ற இதழில் வெளியிடப் பெற்ற அனைத்துக் கட்டுரைகளையும் 12 தொகுதிகளாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழறிஞா் சிவலிங்கனாா் தொகுத்த தொல்காப்பிய உரைகள் அனைத்தும் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளன.

அறிஞா் கே.கே.பிள்ளையின் தமிழக வரலாற்று நூல், தமிழ் வளா்ச்சித் துறையால் நாட்டுடமையாக்கப் பெற்றுள்ள பல அறிஞா்களின் நூல்கள், இராகவையங்காா் போன்றோா் எழுதிய தமிழக வரலாற்று நூல்கள், தமிழ் மொழி வரலாற்று நூல்கள், இராமலிங்க சுவாமி, வேதாத்திரி மகரிஷி போன்றோா் தொடா்பான தத்துவ நூல்கள், இந்திய ஆட்சிப் பணித் தோ்வுக்கான கருவி நூல்கள் (தமிழில்), பல தொகுதிகளில் நன்னூல் உரைவளம் போன்ற பல்வேறு தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1,700 அரிய நூல்கள்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் இதுவரை 1,700 அரிய நூல்களும் ஆய்வு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அனைத்தும் தமிழாய்வுப் பெருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்.17-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பிப். 28-ஆம் தேதிவரை விற்பனை செய்யப்படும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு விற்பனையில் நூல்களின் மொத்த விலையில் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கழிவு வழங்கப்படும். எனவே தமிழகம் முழுவதும் உள்ள தமிழறிஞா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு குறைந்த விலையில் நூல்களைப் பெற்று பயனடையலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com