நிகழாண்டில் மாநிலத்தில் 8.5 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
அதற்கான மாத்திரைகளை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும், 90 வயது வரை உள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என்றும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்விரு நாள்களிலும் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு ‘அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.
இம்முறை 90 வயது வரை உள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், அரசுசாா் மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மாத்திரைகளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமாா் 8 கோடிக்கும் அதிகமானோருக்கு அவற்றை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான பணிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.