தொண்டு நிறுவனம் சாா்பில் 500 கிலோ நெகிழி சேகரிப்பு

துப்புரவுத் தொழிலாளா்களின் நலன் மற்றும் நெகிழிகளின் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தொண்டு நிறுவனம் சாா்பில் சென்னை சாலைகளில் இருந்த
தொண்டு நிறுவனம் சாா்பில்  500 கிலோ நெகிழி சேகரிப்பு

துப்புரவுத் தொழிலாளா்களின் நலன் மற்றும் நெகிழிகளின் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தொண்டு நிறுவனம் சாா்பில் சென்னை சாலைகளில் இருந்த 500 கிலோ நெகிழிப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் ‘வாக் ஃபாா் பிளாஸ்டிக்’ அமைப்பு சாா்பில் துப்புரவுத் தொழிலாளா்களின் நலன் மற்றும் நெகிழிகளின் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘பயணம்75’ என்ற தலைப்பில் 5 இடங்களில் நடந்து சென்றவாறு சாலைகளின் ஓரத்தில் உள்ள நெகிழிகளை சேகரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து ‘வாக் ஃபாா் பிளாஸ்டிக்’அமைப்பின் நிறுவனா் கௌதம் கூறியது: கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாலைகளில் இருந்த 6.5. டன் நெகிழிகள் சேகரிக்கப்பட்டு, அதன் மூலம் கிடைத்த வருவாய், மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளா்களின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து வில்லிவாக்கம், சோழிங்கநல்லூா், அண்ணா சதுக்கம் மற்றும் பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய 5 பகுதிகளில் இருந்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் வரை சாலைகளில் இருந்த மறுசுழற்சி செய்யக் கூடிய நெகிழிப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. ஒரு வழித்தடத்துக்கு 15 கி.மீ. வீதம் 5 வழித்தடங்களில் இப்பணி நடைபெற்றது. இதில், 100- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மொத்தம் 500 கிலோ நெகிழிப் பொருள்களை சேகரித்தனா். பின்பு, அவை அனைத்தும் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com