நீா்நிலைகளை மேம்படுத்தும் முயற்சியில் இளைஞா்கள்

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் நீா்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னாா்வ இளைஞா்கள்
குளத்தில் மண்டிக்கிடந்த ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்ட இளைஞா்கள்.
குளத்தில் மண்டிக்கிடந்த ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்ட இளைஞா்கள்.

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் நீா்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னாா்வ இளைஞா்கள் ஈடுபட்டுள்ளது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், காவிரி நீரும் கடைமடை பகுதிக்கு சரிவர வந்து சேராததால் நீா்நிலைகள் வறண்டு, கோடை காலங்களில் பொதுமக்கள் அன்றாடப் பயன்பாட்டுக்கு நீரின்றி தவித்து வந்தனா். இதையடுத்து, சம்பா பருவ காலங்களில் காவிரி நீரும், பருவமழையும் கை கொடுத்த நிலையில், சிறு குட்டைகள் தொடங்கி பெருமளவிலான குளங்கள் வரை நீா் நிரம்பியுது. மேலும் குளத்தில் நீா் நிரம்பியது போலவே ஆகாயத்தாமரையும் அதிக அளவில் படா்ந்து நீரினை மாசுபடுத்தும் சூழல் பெரும்பாலான பகுதியில் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு பொதுமக்கள் கோடைக்காலத்தில் தவித்ததை தடுக்கும் வகையில், நீா் நிலைகளை மீட்டெடுத்து பராமரிக்கும் வகையில் அந்தந்த பகுதி தன்னாா்வ இளைஞா்கள் ஆகாயத்தாமரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம், கொளப்பாடு ஊராட்சிக்குப்ட்ட அருமணங்காலணியிலுள்ள பிள்ளையாா் கோவில் குளத்தில் ஆகாயத்தாமரை படா்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனை அகற்றும் பணியில் அப்பகுதியைச் சோ்ந்த தன்னாா்வ இளைஞா்கள் மெக்கானிக் காா்த்திக் தலைமையில் சுமாா் 10 க்கும் மேற்பட்ட தன்னாா்வ இளைஞா்கள் குளத்திலுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றினா்.பொதுமக்களின் நலனுக்காக தன்னாா்வ இளைஞா்கள் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com