தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று  முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி


கோவை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று  முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்கப்பட்டு இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்களின் பட்டியலில் கோவை இடம்பெற்றுள்ளது. பெருநகரங்களின் பட்டியலில்  சென்னை இடம்பெற்றுள்ளது. எனவே தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்கள் என்று சென்னை மற்றும் கோவை உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பெண்கள் இரவு நேரத்திலும் கூட சாலையில் செல்லும் நிலையை உருவாக்கியுள்ளோம்.

அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் சிறுபான்மையினர் மக்கள் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லை

திட்டமிட்டு அசியல் லாபத்திற்காக இஸ்லாமிய மக்கள் தூண்டப்பட்ட போராட்டத்தை நடத்த வைக்கிறார்கள். அவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

திமுக 10 ஆண்டுகளுக்கு முன் வைத்த அரசு கடனுக்கு தற்போது வரை வட்டி கட்டப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளாக தொடர்ந்து வட்டி கட்டி வருகிறோம்.

ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சர் கனவில் தான் இருக்கிறார். அடுத்த முறையும் அதிமுக தான் ஆட்சிக்கு வரும். நல்ல திட்டங்கள் அமல்படுத்தப்படுவதால் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

கே சி பழனிச்சாமி அதிமுக-வில் இல்லை. அவர் பல முறை குற்றங்களுக்கு சிறை சென்றுள்ளார். விவசாயிகளின் நலன் கருதியும், பருவமழையை சேமிக்கவுமே குடிமராத்துப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. மக்களிடையே வெற்றித் திட்டமாக உள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்கு அமைச்சரவையில் இருந்து கவர்னருக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தான் நளினியை மட்டும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஊடகத்தை பற்றி தரக்குறைவாக பேசிய ஆர் எஸ் பாரதிக்கு எதிராக எந்த ஊடகமும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

எப்போது பார்த்தாலும் முதல்வர் கனவிலேயே இருக்கிறார் ஸ்டாலின். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி ஸ்டாலின் பேசுவது விநோதமாக உள்ளது. திமுக ஆட்சி காலத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் கோடி கடன் என்பது அப்போதைய சூழலில் பெரிய தொகை. 2011ல் ஆட்சியில் இருந்த திமுகதான் என்பிஆர்ரைத்தொடங்கி வைத்தது என்றும் முதல்வர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com