

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க 31 அதிகாரிகளை நியமித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடாக 31 அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை இயக்கங்களைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் ஆகியோர் இதில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.