பல்லடம் வங்கிக் கொள்ளை: தில்லியில் ஒருவர் கைது

பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கிக் கொள்ளை தொடர்பாக தில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
பல்லடம் வங்கிக் கொள்ளை: தில்லியில் ஒருவர் கைது

திருப்பூர்: பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கிக் கொள்ளை தொடர்பாக தில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தில்லியில் பதுங்கியிருந்த கொள்ளையனை தனிப்படை போலீஸார் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை திருப்பூருக்கு அழைத்து வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பிப்ரவரி 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வேலை நேரம் முடிந்ததும் வங்கி அலுவலா்கள் வங்கியைப் பூட்டி விட்டு சென்றுள்ளனா். சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் அலுவலா்கள் வங்கியைத் திறந்து பணியைத் தொடங்க ஆயத்தமாயினா். 

அப்போது வங்கியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள முள்கம்பி வேலிகளை வெட்டியும், அறுத்தும் பின்புற ஜன்னல் உடைக்கப்பட்டு உள்ளே புகுந்த மா்ம நபா்கள், வங்கியில் புகுந்தது ரூ.18 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் வங்கியில் இருந்த 8 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து காட்சிகளைப் பதிவு செய்யும் கணினி மென்பொருளை மா்ம நபா்கள் எடுத்துச் சென்றுள்ளனா். வாடிக்கையாளா்கள் அடமானம் வைத்த தங்க நகைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

இதே வங்கியில் ஜன்னலை உடைத்து கடந்த ஆண்டு அக்டோபா் 9ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது எதுவும் திருடு போகவில்லை. அதன் பின்னரும் வங்கி நிா்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால்தான் மீண்டும் திருட்டு நடைபெற்றுள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com