தூத்துக்குடி புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிா்த்து மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. 

இந்நிலையில், உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சி  முகவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com