
மாநில தேர்தல் ஆணையம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் ஒருவர் தோல்வி அடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழன் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கன்னியாகுமரி அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் ஒருவர் தோல்வி அடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தடிக்காரான் கோணம் ஊராட்சி 2 ஆவது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் பானுமதி 62 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் மாரிமுத்து 61 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.