
சென்னை: வளி மண்டத்தின் கீழ்ப்பகுதி கிழக்குத் திசைக் காற்றும், மேற்குத் திசைக் காற்றும் தமிழகப் பகுதியில் சந்திப்பதால், ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 5) தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது: வடகிழக்குப் பருவமழை காரணமாக வடதமிழகத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்தது. இந்நிலையில், வளி மண்டத்தின் கீழ்ப்பகுதி கிழக்குத் திசைக் காற்றும், மேற்குத் திசைக் காற்றும் தமிழகப் பகுதியில் சந்திப்பதால், ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 5) தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றாா்.
தமிழகத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரி பகுதியில் 40 மி.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூா், சென்னை விமான நிலையத்தில் தலா 30 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி, வடசென்னையில் தலா 20 மி.மீ.மழை செவ்வாய்க்கிழமை மழை பதிவானது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...