வாக்கு எண்ணும் பணியின்போது திமுக-அதிமுகவினரிடையே வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி நடுக்குப்பம் ஊராட்சியின் 21வது வார்டில் வாக்கு எண்ணும் பணியின்போது திமுக-அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்கு எண்ணும் பணியின்போது திமுக-அதிமுகவினரிடையே வாக்குவாதம்

மேற்கு ஆரணி நடுக்குப்பம் ஊராட்சியின் 21வது வார்டில் வாக்கு எண்ணும் பணியின்போது திமுக - அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த டிச. 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.  

இதில், திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி நடுக்குப்பம் ஊராட்சியின் 21வது வார்டில் வாக்கு எண்ணும் பணியின்போது திமுக - அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் அவ்விடத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் வாக்கு எண்ணும் பணி சிறிது நேரம் தடைபட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com