மன்னார்குடியில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை திறப்பு

மன்னார்குடியில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர் சிலை இரவோடு இரவாக திறக்கப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மன்னார்குடியில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை திறப்பு

மன்னார்குடியில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர் சிலை இரவோடு இரவாக திறக்கப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், அ.தி.மு.க முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் முழுஉருவச் சிலை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் சிலையை திறக்கக் கோரி பெயர் குறிப்பிடாமல் போஸ்டர் ஒன்றும் சிலை அருகே ஒட்டப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு லாரி ஒன்றில் ஜெயலலிதாவின் சிலையுடன் வந்த நபர்கள் சிலர், எம்.ஜி.ஆர் சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை நிறுவி இரு தலைவர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், இன்று காலை மன்னார்குடி தெற்கு வீதியில் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் சிலைகள் திறக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. இது அதிமுக தொண்டர்களை வியப்பில் ஆழ்த்தியது.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக தொண்டர்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய சிலைகள் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்ததாகவும் இதனாலேயே அவசர அவசரமாக இரவோடு இரவாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் சிலைகள் திறக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com