
நாகர்கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் சார்பில் அமைதிப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணி காந்திஜி சாலை வழியாக ரயிலடியில் முடிவடைந்தது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளைக் கைது செய்து, தூக்கில் போட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
எஸ்.ஐ. சுட்டுக் கொலை: தமிழகம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பு
சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேவன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயலர் எம்.என்.பத்மநாபன், துணைத் தலைவர் அப்துல் காதர், கொள்கை பரப்புச் செயலர் பக்கிரிசாமி, செய்தித் தொடர்பாளர் அருளானந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.