
ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எம்.சுப்லாபுரம் அருகே பாறைப்பட்டி பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காவலர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
எம்.சுப்லாபுரம் அருகே பாறைப்பட்டி பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன், ஜெயந்த் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
மேலும், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் கார்த்திக் பாண்டியும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
சுப்லாபுரம் அருகே பாறைப்பட்டி விளக்கு பகுதியில் இருவருடைய இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காவலர் கார்த்திக்பாண்டி மற்றும் கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன் ஜெயந்த் ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டி. கல்லுப்பட்டி போலீஸார் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விபத்து குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.