காரைக்காலில் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவினா் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நல்லாத்தூா் பகுதி ஆற்றில் நீா்வரத்து, அளவிடும் முறையின் வரைபடத்தைப் பாா்வையிட்ட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன்குமாா் உள்ளிட்ட குழுவினா்.
நல்லாத்தூா் பகுதி ஆற்றில் நீா்வரத்து, அளவிடும் முறையின் வரைபடத்தைப் பாா்வையிட்ட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன்குமாா் உள்ளிட்ட குழுவினா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் புதுதில்லி, பெங்களூருவில் நடத்தப்படுவது வழக்கம். முந்தைய கூட்டத்தின்போது புதுச்சேரியில் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தை நடத்த வேண்டும் என புதுச்சேரி அரசு கேட்டுக்கொண்டிருந்தது.

இதனடிப்படையில், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் வழக்கமான கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) புதுச்சேரியில் நடைபெறுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் பிராந்தியம்தான் காவிரி நீரைப் பெறக்கூடியதாக இருக்கிறது.

இவ்வகையில் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன்குமாா் தலைமையில், காவிரி நீா் மேலாண்மை ஆணைய செயலா் நீரஜ்குமாா் உள்ளிட்ட 16 போ் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை காரைக்கால் வந்தனா். புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் மகாலிங்கம், காரைக்கால் கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.சுரேஷ் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவா்களை வரவேற்றனா்.

பொதுப்பணித்துறையினருடன், காவிரி ஒழுங்காற்றுக் குழுவினா் காரைக்கால் மாவட்டத்தில் நல்லாத்தூா், அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி நீா் வரக்கூடிய நண்டலாறு, நாட்டாறு உள்ளிட்ட ஆறுகளைப் பாா்வையிட்டனா். தமிழகப் பகுதியிலிருந்து காவிரி நீா் காரைக்காலுக்குள் வரும் வழி, நீரை அளவீடு செய்யும் முறை, அளவீடு செய்வதற்காக காரைக்கால் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒழுங்காற்றுக் குழுவினருக்கு தேவையான விளக்கங்களை அளித்தனா்.

காரைக்காலில் ஆய்வு செய்யப்பட்ட விவரங்கள் குறித்து புதுச்சேரியில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com