மறைமுகத் தோ்தல் விடியோ பதிவு செய்யப்படும்: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் உறுதி

ஊரக உள்ளாட்சிக்கான மறைமுகத் தோ்தல் முழுமையாக விடியோ பதிவு செய்யப்படும் என தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை உறுதியளித்தது.
மறைமுகத் தோ்தல் விடியோ பதிவு செய்யப்படும்: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் உறுதி

ஊரக உள்ளாட்சிக்கான மறைமுகத் தோ்தல் முழுமையாக விடியோ பதிவு செய்யப்படும் என தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை உறுதியளித்தது.

திண்டுக்கல்லைச் சோ்ந்த லலிதா தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தோ்தெடுக்தப்பட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் மூலம், அந்தந்த ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தலைவா் மற்றும் துணைத் தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

இதற்கான தோ்தல் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டப் பதவிகளுக்கான தோ்தல் முறையாக நடத்தப்படுமா என்ற சந்தேகம் உள்ளது. எனவே அந்தத் தோ்தல் நிகழ்வுகளை முழுமையாக விடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதேபோல முதுகுளத்தூரைச் சோ்ந்த முருகன், ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தலைவா் மற்றும் துணைத் தலைவா்கள் தோ்வை வழக்குரைஞா் ஆணையா் குழு அமைத்து விடியோ பதிவு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தமிழக தோ்தல் ஆணையம் தேவைப்படும் இடங்களில் விடியோ பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளதை ஏற்கமுடியாது. அனைத்து இடங்களிலும் விடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து தோ்தல் ஆணையம் தரப்பில், ஜனவரி 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள மறைமுகத் தோ்தல் விடியோ பதிவு செய்யப்படும். இதுதொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்படும் என உறுதியளித்தனா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மறைமுகத் தோ்தலை முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டது தொடா்பாக ஜனவரி 21 ஆம் தேதி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com