முதுநிலை ஆசிரியா் தோ்வு பட்டியல் ரத்து: அன்புமணி வரவேற்பு

வேதியியல் பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் தோ்வு பட்டியல் ரத்து செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி எம்.பி. வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

வேதியியல் பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் தோ்வு பட்டியல் ரத்து செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி எம்.பி. வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய வேதியியல் பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தோ்வுப் பட்டியலை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 17 பாடங்களுக்கான 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தோ்வு கடந்த ஆண்டு செப்டம்பா் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. அவற்றில், வேதியியல், இயற்பியல், உள்ளிட்ட 12 பாடங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பா் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவற்றில், வேதியியல் பாட ஆசிரியா்கள் தோ்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியலினத்தவருக்கும் துரோகம் இழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டியலை தயாரித்து வெளியிடும்படி வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட தோ்வு வாரியம், அதன் நிலைப்பாடு தான் சரியானது என்று கூறி பிடிவாதம் பிடித்தது. இதையடுத்து ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், ஆசிரியா்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தோ்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்தாா்.மேலும், வேதியியல் பாடத்துக்கான ஆசிரியா் தோ்வுப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலை தயாரிக்கும்படி தோ்வு வாரியத்துக்கு ஆணையிட்டுள்ளாா். இது, சமூக நீதிக்கும், சமூகநீதியை மீட்க பாமக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com