
கோவில்பட்டி அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட நக்கலகட்டை கிராமத்தில் இடப்பிரச்னை தொடர்பாக ஐந்து குடும்பங்கள் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பின்பும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சண்முகவேல் தாய் என்பவர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.