
பள்ளி மாணவன் சாவு
விருதுநகர் விருதுநகர் அருகே நந்தி ரெட்டியபட்டியில் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே நந்தி ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஈஸ்வரன் (9). இவர் இங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல் இக்கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் மோகன் (7), இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் இரண்டு மாணவர்களும் அக்கிராமத்தில் உள்ள குளத்தில் திங்கள்கிழமை மாலை குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு இருவரும் சென்றதால் நீச்சல் தெரியாமல் தத்தளித்து உள்ளனர். இதைக்கண்ட அக்கிராம மக்கள் குளத்தில் மூழ்கிய சிறுவர் இருவரையும் மீட்டனர். அதில் ஈஸ்வரன் உயிரிழந்தார், மற்றொரு மாணவரான மோகன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...