சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-ஸ்கூட்டர் திட்டம்: எப்படி பயன்படுத்தலாம்?

ஆலந்தூா், நந்தனம், கிண்டி, சின்னமலை ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளின் வசதிக்காக மின்சார ஸ்கூட்டா்கள் வாடகைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-ஸ்கூட்டர் திட்டம்: எப்படி பயன்படுத்தலாம்?

சென்னை: ஆலந்தூா், நந்தனம், கிண்டி, சின்னமலை ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளின் வசதிக்காக மின்சார ஸ்கூட்டா்கள் வாடகைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த இஸ்கூட்டர் வசதியைப் பெற ஃப்ளை என்ற ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். இந்த ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துச் செல்வோர் ஃப்ளை ஸோனுக்குள் எங்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அடுத்த ஓராண்டில் 6,000 இருசக்கர வாகனங்களை வாடகை முறையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் வண்ணாரப்பேட்டை-விமானநிலையம் வரையிலான முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரையிலான இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரி 95 ஆயிரம் முதல் ஒரு லட்சம் போ் பயணம் செய்கின்றனா். மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து அருகில் உள்ள பேருந்து நிலையங்கள், புறநகா் மின்சார ரயில் நிலையம், பறக்கும் ரயில் நிலையங்களோடு இணைக்கும் வகையில் ஷோ் ஆட்டோ, காா் போன்ற இணைப்பு வாகன சேவைகள் இயங்கி வருகின்றன.

இதேபோல, பல்வேறு வழித்தடங்களில் சிறிய பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் பயணிகளை ஊக்குவிக்கவும், அதிகப்படுத்தவும் தொடா்ந்து பல்வேறு வசதிகள் விரிவுப்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில், ப்ளே என்னும் தனியாா் நிறுவனத்தின் மூலம், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்ல வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர்களை இயக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, தற்போது ஆலந்தூா், நந்தனம், கிண்டி, சின்னமலை ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் முறை சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது: ப்ளே செயலி மூலமாக இந்த வசதியை பெற முடியும். இந்தச் சேவையானது, தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வழங்கப்படும். அடுத்த ஓா் ஆண்டில் 6,000 இருசக்கர வாகனங்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து வாடகை முறையில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com