
சென்னை: சென்னையை அடுத்த வளசரவாக்கத்தில் நீளமாக முடி வளர்ப்பதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ் 2 மாணவரான ஸ்ரீனிவாசன் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீனிவாசன் கடந்த 3 மாத காலமாக தலைமுடியை நீளமாக வளர்த்து வந்துள்ளார். இதனை அவர் தாய் கண்டித்திருக்கிறார். எனினும் அவர் தலைமுடியை வெட்டவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக தாய்க்கும் மகனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீனிவாசன் நேற்று இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...