
உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி என்ற இடத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற கார் மீது அரசுப் பேருந்து நள்ளிரவு மோதியது. இதனால் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் கீழே நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்து அங்கு நின்று இருந்தவர்கள் மீது மோதியதில், அரசுப் பேருந்தில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.