

தமிழக அரசு உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிடுகையில்,
"தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுச்சூழல் அனுமதியோ, பொது மக்களின் கருத்துக்கேட்புக் கூட்டமோ அவசியமில்லை என மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மக்களாட்சி தத்துவத்தை குலைத்து சனநாயக நெறிமுறைகளைக் கொலைசெய்து வளக்கொள்ளையில் ஈடுபடத் துடிக்கும் மத்திய அரசின் இக்கொடுஞ்செயலுக்கு வன்மையான கண்டனங்கள்.
தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கெதிராக கொள்கை முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.