உயர்மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தாலி ஒப்படைக்கும் போராட்டம்

உயர்மின் கோபுரம் அமைப்பதைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தாலி ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.
தாலி ஒப்படைக்கும் போராட்டம்
தாலி ஒப்படைக்கும் போராட்டம்

திருப்பூர்: உயர்மின் கோபுரம் அமைப்பதைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தாலி ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மிபாளையம் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைப்பதைக் கண்டித்து  பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. கடந்த வாரம் உயர் மின் கோபுரம் அமைக்க அளவிடும் பணிகள் மேற்கொண்டதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற பேரணியாகச் சென்ற கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும்  எந்த வித அறிவிப்புமின்றி அளவிடும் பணிகள் மேற்கொள்வதைக் கண்டித்தும் கோவை மாவட்டத்தை போல உயர்ந்த பட்ச இழப்பீடு வழங்க கோரியும் பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சள்  கட்டிய தாலியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com