சாத்தூரில் அரசு மருத்துவமனை கரோனா வார்டாக மாற்றம்

சாத்தூரில் உள்ள புதிய அரசு மருத்துவமனை அரசு ஊழியர்களுக்கான கரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
கரோனா வார்டாக மாற்றப்பட்ட சாத்தூர் அரசு மருத்துவமனை
கரோனா வார்டாக மாற்றப்பட்ட சாத்தூர் அரசு மருத்துவமனை

சாத்தூரில் உள்ள புதிய அரசு மருத்துவமனை அரசு ஊழியர்களுக்கான கரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் கரோனா வார்டாக மாற்றம் செய்யபட்டுள்ளது. மேலும் தற்போது கரோனா தொற்றின் தாக்கம் அனைத்து பகுதியிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இதைத்தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இதில் ஒரு பகுதியாக சாத்தூர் அரசு மருத்துவமனை அரசு ஊழியர்களுக்கான கரோனா வார்டாக மாற்றும் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே சாத்தூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலும், பிரதான சாலை என இரண்டு இடங்களில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்றின் அதிக தாக்கத்தால் சாத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள புதிய அரசு மருத்துவமனை அரசு ஊழியர்களுக்கான கரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40 படுக்கை வசதிகள் கொண்டு கரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டு, சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியாற்றி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையிலிருந்த அனைத்து நோயாளிகளும், பிரதான சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றும் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த பிரசவ பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, வெளிய நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் பிரதான சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com