
கோப்புப்படம்
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,328 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது.
இதில், சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,140 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு 78,573 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 3,188 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.
மேலும், சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 464, காஞ்சிபுரத்தில் 352, திருவள்ளூரில் 337, செங்கல்பட்டில் 219 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக பட்டியல்: இங்கே க்ளிக் செய்யவும்..