பவானி கதவணை மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து

பவானி கதவணை மின் உற்பத்தி நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பவானி கதவணை மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து

பவானி கதவணை மின் உற்பத்தி நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிப்பாளையத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பவானி கதவணை மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு பில்லூர் அணையிலிருந்து திறந்து விடும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு தினசரி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் 11 மணிக்கு பவானி கதவணை மின் நிலையத்தில் உள்ள 2 மின்மாற்றியில் ஒரு மின்மாற்றியில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென வெடித்தது. இதைத்தொடர்ந்து இதிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு மின் உற்பத்தி செய்யும் அறையில் உள்ள மின் ஒயர்கள் அனைத்தும் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து மின் உற்பத்தி நிலைய அறையிலிருந்து பயங்கரமான புகைமூட்டம் ஏற்பட்டு வந்தது. இதனால் தீயை அணைக்கும் பணிக்கு வந்திருந்த தீயணைப்பு வீரர்கள் புகைமூட்டம் அதிகம் ஏற்பட்டதால் அதே பகுதியில் ஒரு சிலர் மயங்கி விழுந்தனர். 

இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரர்கள் அவர்களை உடனடியாக அங்கிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் தொடர்ந்து புகைமூட்டம் அதிக அளவில் இருந்ததால் கோவை மற்றும் அன்னூர் பகுதிகளிலிருந்து கூடுதலாக 30 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் உற்பத்தி நிலையம் அருகே உள்ள கரட்டுமேடு குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com