

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,725 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 4,979 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் சென்னையில் அதிகபட்சமாக 1,254 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 405 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.