
தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது.
இது குறித்த விவரம்:-
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 7,91,051 வழக்குகளைப் பதிவு செய்து 8,68,889 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6,40,145 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.18,30,58,491 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை பொது முடக்கத்தை மீறியதாக 764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G