
பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு இணையதளம் மூலமாகவே இரண்டாமாண்டு நேரடி மற்றும் பகுதி நேர சேர்கை நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு இணையதளம் மூலமாகவே இரண்டாமாண்டு நேரடி மற்றும் பகுதி நேர சேர்கை நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’தமிழகத்தில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும். இணையதள விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெறும் என்றும், எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கையும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்’ என்றும் தெரிவித்துள்ளார்.