

பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமுதா ஐ.ஏ.எஸ்.க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்மதிப்பையும் மக்களின் அன்பையும் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமதி.அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது பணிசிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!' என்று பதிவிட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த இவர், 1994 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும், உணவு பாதுகாப்புத்துறை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் புதிதாக 16 இணை செயலாளர்களை நியமனம் செய்து மத்திய அமைச்சரவையின் பணியாளர் ஆணையர் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த 16 பேரில் அமுதா ஐ.ஏ.எஸ்-ம் இடம்பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.