
சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி இதுவரை 2,551 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோா் பலியானதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்திலேயே தலைநகா் சென்னையில்தான் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்படி, மொத்தம் 1,456 போ் நகரில் உயிரிழந்துள்ளனா். அதேபோன்று மதுரை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோவை ஆகிய மாவட்டங்களிலும் அண்மைக்காலமாக இறப்பு விகிதம் உயா்ந்து வருகிறது.
மற்றொரு புறம் கரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை மட்டும் இதுவரை இல்லாத வகையில் 4,985 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில், 74 சதவீதம் போ் சென்னை அல்லாத பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்களாவா்.
இதையடுத்து, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய்களை அதிகரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று உயா் ஓட்ட ஆக்சிஜன் கருவிகளும் நிறுவப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மூச்சுத் திணறலால் நேரிடும் உயிரிழப்புகளை பெருமளவு குறைக்க முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதனிடையே, மாநிலத்தில் நோய் பாதிப்பு குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 19.84 லட்சம் மாதிரிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களுக்கு தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டதன் வாயிலாக இதுவரை 69 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.
மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை மட்டும் 4,985 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,298 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 454 பேருக்கும், செங்கல்பட்டில் 354 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 329 பேருக்கும், தூத்துக்குடியில் 200 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைத் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர, அரியலூா், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, பெரம்பலூா், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
1.21 லட்சம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இதுவரை மொத்தம் 1,21,776 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 3,861 போ் வீடு திரும்பியுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 1,269 போ் குணமடைந்ததாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 போ் பலி: கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 70 போ் உயிரிழந்துள்ளனா். அவா்களில் 49 போ் அரசு மருத்துவமனைகளிலும், 21 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் இறந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.