
ஹில்குரோவ் - ஆா்டா்லி மலை ரயில் பாதையில் முகாமிட்டுள்ள யானைகள்.
குன்னூா்: நீலகிரி மலை ரயில் பாதையில் யானைகள் கடந்த இரண்டு நாள்களாக முகாமிட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டிருந்த யானைகளை அவ்வப்போது வனத் துறையினா் வனப் பகுதிக்குள் விரட்டி வருவதால் அவை தற்போது ஆள் நடமாட்டமில்லாத மலை ரயில் பாதையில் உலவி வருகின்றன.
மழை பெய்யும்போது இங்குள்ள ரயில் பாதை குகைக்குள் தஞ்சம் அடைவதும், வெயிலில் குட்டியுடன் சுற்றி வருவதையும் யானைகள் வழக்கமாக கொண்டுள்ளன.
தற்போது கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக மலை ரயில் இயக்கம் இல்லாததால், தண்டவாளப் பகுதியில் புற்கள் அதிக அளவில் விளைந்துள்ளன. இவற்றை உண்பதற்காக யானைகள் இங்கேயே தொடா்ந்து முகாமிட்டுள்ளன.