கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா ரத்து

ஆடிப் பெருக்கையொட்டி கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழா கரோனா தொற்று பரவலால் ரத்து செய்யப்படுகிறது.
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா ரத்து
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா ரத்து

நாமக்கல்: ஆடிப் பெருக்கையொட்டி கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழா கரோனா தொற்று பரவலால் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவையொட்டி பல்வேறு மாநில விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் வில்வித்தை போட்டிகளும் நடைபெறுவது வழக்கம். 

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிகழாண்டில் ஆடிப்பெருக்கையொட்டி  ஆக.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற வேண்டிய வல்வில் ஓரி விழா நடத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் மலர் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், வில்வித்தை போட்டிகளும் நடைபெறாது. எனவே, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் கொல்லிமலைக்கு வர வேண்டாம். மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி வருவோர் மீது தடை உத்தரவு சட்டம், கொள்ளை நோய் தடுப்பு சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com