
கந்த சஷ்டி கவசம் சர்ச்சை தொடர்பாக கறுப்புர் கூட்டம் அமைப்பைச் சேர்ந்த குகன், சோமசுந்தரம் ஆகியோரை 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி கவசம் சர்ச்சை தொடர்பாக கறுப்புர் கூட்டம் அமைப்பைச் சேர்ந்த குகன், சோமசுந்தரம் ஆகியோரை 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் விடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் அமைப்பின் யூ டியூப் சேனல் மீது மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில்வாசன் மற்றும் சுரேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கடந்த 17-ஆம் தேதி கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு காவல் துறையினர் சீல் வைத்தனர்.
இதையடுத்து, அந்த யூ டியூப் சேனலின் ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம் மற்றும் விடியோ எடிட்டர் குகன் ஆகிய இருவரையும் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று (திங்கள்கிழமை) கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ரோஸ்லின் துரை முன்பாக,. சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, சோமசுந்தரம் மற்றும் குகன் ஆகியோரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.